லங்கா பிரீமியர் லீக் தொடரில் கோல் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பி லவ் கண்டி அணி 89 ஓட்டங்களால் அமோக வெற்றிபெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கோல் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்ததுடன், முதலில் துடுப்பாடிய பி லவ் கண்டி அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 203 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் அந்த அணிசார்ப்பில் அதிகபடியாக வனிந்து ஹசரங்க 27 பந்துகளில் 64 ஓட்டங்களை பெற்று கொடுத்துள்ளார்.
இந்நிலையில், 204 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய கோல் டைட்டன்ஸ் அணி 16.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 114 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.