பிரித்தானியாவில் Eris என அழைக்கப்படும் கோவிட்டின் புதிய மாறுபாட்டு வைரஸ் அதி வேகமாக பரவுவதன் காரணத்தால், அங்குள்ள சுகாதார அதிகாரிகள் மத்தியில் பெரும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வைரஸின் புதிய மாறுபாடு குறித்த மிக உன்னிப்பாகக் அவதானித்து வருவதாகவும், அதன் பரவல் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் Omicron, Eris, அல்லது EG.5.1 என்று அழைக்கப்படும் இந்த ரக வைரஸ் கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி அன்று கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது இந்த புதிய வைரஸ் ஒவ்வொரு 10 பேரில் ஒருவருக்கு பரவ ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கையிலும் பரவும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டில் பரவும் எந்தவொரு புதிய நோயும் இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால், அது குறித்து சுகாதார அமைச்சு எப்போதும் விழிப்புடன் இருப்பதாக இலங்கை கோவிட் இணைப்பாளர் மருத்தவர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் பரவும் வைரஸைப் பொருத்தவரை, நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம் அத்துடன் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.