கந்தானை பகுதியில் உள்ள இரசாயன உற்பத்தி தொழிற்சாலைக்கு சொந்தமான களஞ்சியசாலையில் திடீரென தீ பரவியதில் எழுந்த புகையினை சுவாசித்தால் ஏற்பட்ட சுவாச கோளாறினால் 50 மாணவர்கள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கந்தானை புனித செபஸ்தியார் கல்லூரி மாணவிகள் இவ்வாறு சுவாச கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தின் போது அந்த களஞ்சியசாலையின் கணக்காளர் கட்டிடத்திற்குள் இருந்ததால் அவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
மேலும் இத்தீவிபத்திற்கான உரிய காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என கந்தானை பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.