இலங்கை மத்திய வங்கி வளாகத்துக்குள் பலவந்தமாக நுழைந்தவர்களில் ஒரு பெண் உட்பட 08 பேர் கைது செய்து பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் குத்தகை மற்றும் கடன் செலுத்துதல் தொடர்பில் தீர்வு வேண்டி குறித்த குழுவினர் வலுக்கட்டாயமாக நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து அவர்கள் பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்