நாடு முழுவதும், சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
வைத்திய துறையில் பல பிரிவுகளை பிரதிநிதித்துவப்படும் அவர்கள் எந்தவொரு தகைமையும் இன்றி, நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இது தொடர்பில் கருத்து தெரிவித்தார்.
இவ்விடயம் நாட்டில் பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார். இக்குறித்த விடயம் தொடர்பில், பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாகவும் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.