இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ள முக்கிய அறிவிப்பு இன்று அதிகாலையில் இருந்து சமனல குளத்திலிருந்து விவசாயத்திற்கு தேவையான போதியளவு நீர் விடுவிக்கப்பட்டும்.
விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை தொடர்ந்து, விவசாய நடவடிக்கைகளுக்காக சமனல குளத்தில் இருந்து நீரை விடுவிப்பதற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியது.அத்துடன், தேசிய மின் தேவைக்காக மாற்றுவழியை கண்டறிவதற்கும் அமைச்சரவை தீர்மானித்தது.
அதன்படி, விவசாயிகளுக்கு விவசாய நடவடிக்கைக்கு தேவையான நீரை சமனல குளத்தில் இருந்து உடவளவ நீர்த்தேக்கத்துக்கு விடுக்குமாறு தொடர்புடைய அதிகாரிகளுக்கு நேற்று அறிவுறுத்தப்பட்ட நிலையில், இன்று அதிகாலை முதல் நீர் விடுவிக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை, உடவளவ நீர்த்தேக்கத்திற்கு நீரை விடுவிக்குமாறு கோரி எம்பிலிப்பிட்டி மாநகர சபைக்கு முன்பாக வரும் விவசாயிகள் முன்னெடுத்த சத்தியாக்கிரக போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.
பயிர்ச்செய்கைக்கு 3 நாட்கள் மாத்திரம் நீர் விடுவிக்கப்படுவது போதுமானதாக அமையாது எனவும் விவசாயிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமது விவசாயத்திற்கு போதியளவு நீர் உரிய வகையில் கிடைக்கப்பெறும் வரையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.