லங்கா பிரீமியர் லீக்(LPL) கிரிக்கெட் தொடரின் இன்றைய நாளுக்கான முதலாவது போட்டியில் கொழும்பு அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு அணி முதலில் பந்துவீச தீர்மானித்ததுடன் எதிர்த்து துடுப்பாடிய காலி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 03 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணிசார்பில் அதிகபடியாக டிம் சீஃபர்ட் 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இதற்கமைய, 189 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய கொழும்பு அணி 19.5 ஓவர்களில் 03 மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
கொழும்பு அணிசார்பில் அதிகபடியாக, பாபர் அசாம் 104 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவர் 59 பந்துகளில் 08 நான்கு ஓட்டங்கள் 05 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 104 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.