யுனிசெப் அமைப்பின் கௌரவ தூதுவராக செயற்படும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இன்று (7) அவர் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள பாடசாலையொன்றிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வில் அவருடன் ஆளுநர் நவீன் திசாநாயக்கவும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ருவன்வெல்ல பல்லேக்னுகல கனிஷ்ட கல்லூரிக்குச் சென்ற சச்சின் டெண்டுல்கர், பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் எவ்வாறு கற்கைகள் இடம்பெறுகின்றன என்பதை அவதானித்தார்.
மேலும் கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.