திருகோணமலை விமான விபத்தில் இருவர் பலி!

திருகோணமலை – சீனக்குடா விமான பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
திருகோணமலை – சீனக்குடா விமான கல்லூரியில் அமைந்துள்ள இலக்கம் 01 பறக்கும் பயிற்சி பிரிவின் விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட PT 6 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

குறித்த விபத்து இன்று (07.08.2023) முற்பகல் 11.27 மணியளவில் சீனக்குடா விமானப்படை முகாம் பகுதியில் இடம்பெற்றதுடன், அதில் பயணித்த இரண்டு அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர்

மேலும், இந்த விபத்தில் 02712 W/C HMTK ஹெரத் மற்றும் 12271 F/O  KMPM வரன்சூரியா ஆகிய விமானப்படை வீரர்களே உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்சவினால் விசேட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.