தங்கள் விளைநிலங்களுக்கு நீர் கேட்டு கொழும்பிலுள்ள மின்சார சபை தலைமையகத்தை சுற்றிவளைப்பதற்கு விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
இன்று (7) பிற்பகல் எம்பிலிப்பிட்டிய, உடவலவ, மொனராகலை உள்ளிட்ட தென் மற்றும் ஊவா மாகாணங்களின் விவசாயிகள் இவ்வாறு மின்சார சபையை சுற்றிவளைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாகாணங்களில் நிலவும் கடும் வரட்சியுடன் கூடிய காலநிலையால் பயிர்கள் அழிவடையும் நிலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கும் விவசாயிகள் சங்கங்கள், சமனல நீர்த்தேக்கத்தில் இருந்து உடவல நீர்த்தேகத்திற்கு நீரை அனுப்பினால் பயிர்களுக்கு நீரை பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்கும் என்றும், ஆனால் மின்சார நடவடிக்கைகளுக்காக நீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால் தாம் நெருக்கடிகளை சந்திப்பதாக விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.