நடிகர் அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களில் மங்காத்தா இற்கு தனி இடம். இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித்தின் திரைப்படங்களில் மங்காத்தா முதலிடத்தில் இருக்கும். அந்த அளவிற்கு வசூலிலும், விமர்சனத்திலும் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மங்காத்தா திரைப்படத்திற்கு பின் அர்ஜுன், திரிஷா, அஜித் இந்த மூவரும் எந்த ஒரு திரைப்படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.
இந்நிலையில், வெளியாகியுள்ள புதிய தகவலின்படி, தற்போது அஜித் நடித்துக்கொண்டிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி திரை ஆர்வலர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.
இத்திரைப்படத்தில் முதலில் திரிஷா நடிக்கவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில், அவருக்கு பதில் தமன்னா என சில வாரங்களுக்கு முன் தகவல் வெளிவந்தது. ஆனால், தற்போது திரிஷாவிற்கு பதிலாக தமன்னா நடிக்கவில்லை திரிஷாவுடன் இணைந்து தான் தமன்னா இப்படத்தில் நடிக்கிறார் என தகவல் கூறப்படுகிறது.
மேலும், இவர்களுடன் இணைந்து அர்ஜுன் தாஸ் முக்கிய ரோலில் நடிக்கிறாராம். இந்த நடிகர், நடிகைகளின் கூட்டணி விடாமுயற்சி படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாகியுள்ளது.