யாழ் புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் நேற்றைய தினம் (05) 2.15 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அரியாலை – நெடுங்குளத்தை சேர்ந்த திலீபன் ஈழப்பிரியா (27) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். குறித்த பெண் துவிச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு ரயில் முன் பாய்ந்ததாக கூறப்படுகின்றது. அவருக்கு ஒன்றரை வயதில் பிள்ளை ஒன்றும் இருப்பதாக கூறப்படுகின்றது. கணவனுக்கு அதிக கடன் தொல்லையென்றும் அவர் வெளிநாடு செல்வதற்காக டுபாயில் தங்கி நிற்பதாகவும் கடன்காரர்களின் தொல்லை தாங்க முடியாமல் இந்தப் பெண் தற்கொலை செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்ப்பில் யாழ் அரியாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.