சொக்கலட்டினுள் மனிதவிரல் -மகியங்கனையில் சம்பவம் – படங்கள்இணைப்பு

மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் ஊழியர் ஒருவரினால் வைத்தியசாலையின் உணவு விடுதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரபல  சாக்லேட் ஒன்றினுள் மனித உடலிலிருந்து பிரிக்கப்பட்ட பெருவிரலின் ஒரு பகுதி நேற்று (05) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டது.

இதனை அடுத்து பொது சுகாதார பரிசோதகரின் விசேட பரிசோதனைக்கு குறித்த சம்பவம் அறிவிக்கப்பட்டதுடன் உணவகத்தை ஆய்வு செய்த பொது சுகாதார ஆய்வாளர்கள், அந்த சாக்லேட் தயாரிப்பு தொடர்பான  அதே வகையைச் சேர்ந்த மற்ற சாக்லேட் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

வைத்தியசாலை ஊழியர் வாங்கிய சாக்லேட் கடந்த 03 நாட்களுக்கு முன்பு வாங்கி, அதில் ஒரு பகுதியை சாப்பிட்டு, மீதமுள்ள பகுதியை குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார். ஆனால் நேற்றுமுன்தினம் அதை சாப்பிட்டபோது, அந்த சாக்லேட்டில் தடிமமான ஏதோ இருப்பது போல் உணர, அது “ப்ரூட் அண்ட் நட்” வகையினை சேர்ந்த சாக்லேட் என்பதால் அந்த உணவின் பகுதியாக இருக்கலாம் என்று நினைத்து, கடுமையாக கடித்து பின்னர் அந்த நேரத்தில், துண்டுகளாக இல்லாத பகுதியை எடுத்து, தண்ணீர் குழாயில் பிடித்து கழுவினார். அது மனித விரல் என்பதை பார்த்து சத்தமாக கத்தியுள்ளார். 

அவரது அலறல் சத்தம் கேட்டு, வந்த உறவினர்கள் , சம்பவம் குறித்து விசாரித்து, வைத்தியசாலை வைத்திய கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சாக்லேட் உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக மஹியங்கனை பொது சுகாதார பரிசோதகர் நாளை (07) மஹியங்கனை நீதிமன்றில் உண்மைகளை அறிக்கை செய்ததன் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.