யாழ்ப்பாணம் – பொன்னாலை பகுதியில் சுமார் 228 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதானவர் பண்டாரவளை பகுதியை சேர்ந்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
பொன்னாலை – பரவைக்கடல் ஊடாக கடத்திவரப்பட்ட குறித்த தொகை கேரள கஞ்சா, பொன்னாலைச் சந்திக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்த நிலையில் சந்தேகநபர் பிரதேச மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு, வட்டுக்கோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.