வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான சொக்கலிங்கம் சபேசன் மீது நேற்று இரவு இனந்தெரியாத குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் காயமடைந்த அவர் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.