புகையிதரம் மோதிஇருவர் பலி

வெயாங்கொடை – வத்துருவ புகையிரத  நிலையத்துக்கு அருகில், தொலைபேசி பேசிக்கொண்டு,தொடருந்து மார்க்கத்தில் நடந்துசென்ற இரு இளைஞர்கள் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளனரஇன்று 25/05/2023 அதிகாலை 5.45 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த இரு இளைஞர்களின் வீடுகள் புகையிரத தண்டவாளத்திற்கு  அருகாமையில் அமைந்துள்ளதாகவும், அவர்கள் இன்று காலை சுற்றுலா செல்வதற்கு தயாராகி வத்துருவ புகையிரத  நிலையத்தை நோக்கி சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.எனினும் இருவரும் கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டே நடந்துசென்றபோது, பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக,காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.வெயாங்கொடை – வத்துருவ பிரதேசத்தைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களே சம்பவஇடத்தில் உயிரிழந்துள்ளனர்விபத்தின் பின்னர், உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்கள் வெயங்கொட தொடருந்து நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *