மேஷ ராசியின் பலன்
மேஷ ராசி நண்பர்களே!உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு கிடைக்கும். நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது ஆகும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும்.கணவன்-மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும். இன்று நீங்கள் சிவபெருமான் வழிபட்டில் ஈடுபடுவது நன்று அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன்
அனுசரித்துச் செல்வது நல்லது.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும்.
பஞ்சாங்கம்
நாள்-திங்கள்கிழமை
திதி-திரிதியை இரவு 11.41 வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்-மிருகசீரிடம் காலை 11.02 வரை பிறகு திருவாதிரை
யோகம்-அமிர்தயோகம் காலை 11.02 வரை பிறகு சித்தயோகம்
ராகுகாலம்-காலை 7.30 முதல் 9 வரை
எமகண்டம்-காலை 10.30 முதல் 12 வரை
நல்லநேரம்-காலை 6.30 முதல் 7.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை
சந்திராஷ்டமம்-விசாகம் காலை 11.02 வரை பிறகு அனுஷம்