வெளிநாட்டு ஆசைகாட்டி 81 இலட்சம் மோசடி
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி 81 இலட்சம் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவர் நேற்று நிகவெரட்டிய பிரதேசத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்குரிய பெண் ஹலவத்த பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், இஸ்ரேல் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி இந்த மோசடியை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி சுமார் 25 பேரிடம் இருந்து காசு மோசடி செய்துள்ளர் இவரை நம்பி காசு கொடுத்தவர்கள் அவர் மீது வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அந்த முறைப்பாடுகளின் பிரகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண்ணை இன்று ஹலவத்தை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.