சக மாணவனை தாக்கி காணொளியாக வெளியிட்ட மாணவர்கள் கைது..! 

வவுனியாவில் பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனை கடுமையாக தாக்கி அதனை காணொளியாக பதிவுசெய்த சக மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யபட்டனர்.இந்த சம்பவம் 18/05/2023 ஆம் திகதி நடைபெற்றுள்ளது .வவுனியா பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்குழு ஒன்று வவுனியா வைரவ புளியங்குளம் வீதியில் சக மாணவனை சரமாரியாக தாக்கி அதனை காணொளியாக பதிவு செய்து TikTok இல் பதிவு செய்துள்ளனர்.இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவனால் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது தொடர்ந்து குறித்த வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு மாணவர்கள் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மாணவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *