பிளாஸ்டிக் குழாயால் பாரிய தீவிபத்து…..!
அரநாயக்க உஸ்ஸாபிடிய பொது மைதானத்தில் அசுபினி எல்ல நீர் திட்டத்துக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிகள் குழாய்கள் களஞ்சியசாலையில் நேற்று மாலை 3.30 அளவில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
மாவனல்லை தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்றிவதற்காக அரநாயக்க காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.