யாழில் பாடசாலை மாணவியை கடத்த முயற்சித்தவர் மக்களால் மடக்கிப்பிடிப்பு!
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை முச்சக்கர வண்டியில் வந்து கடத்த முயற்சித்தார் என தெரிவித்து வெளியிடத்தைச் சேர்ந்த ஒருவரை அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைத்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.