கணவனை கொன்று புதைத்த மனைவி..! 33 வருடங்களின் பின் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது..!
33 வருடங்களுக்கு முன்னர் தனது தந்தை கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக ஊருபொக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தற்போது மனநிலை பாதிக்கப்பட்டுள்ள தாய், “நான் செய்தது பாவம்” என தனது சொந்த சகோதரியிடம் கூறி கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதற்கமைய, அவரது மகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளதுடன், தனது தந்தை கொன்று புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கழிவறை குழியையும் அவர் பொலிஸ் அதிகாரிகளிடம் அடையாளம் காட்டியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஊருபொக்க பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதோடு, உடல் எச்சங்கள் இன்றையதினம் (15) நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்