வடமராட்சி ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவர் ஆனையிறவு விபத்தில் பலி..!
சில தினங்களுக்கு முன்னர் யாழ் – ஆனையிறவு பகுதியில் ஹயஸ் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் வடமராட்சி சாரையடி பகுதியைச் சேர்ந்த 27 வயதான சத்தியமூர்த்தி சத்ஜன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அத்துடன் இவர்
ஹாட்லி கல்லூரியின் முன்னாள் ஆங்கில இலக்கிய ஆசிரியரும் ஓய்வு பெற்ற உதவி கல்விப் பணிப்பாளருமான திரு. சுந்தரமூர்த்தி ஆசிரியரின் மகனும் ஆவார்.
சுந்தரமூர்த்தி சேர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் எமது அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.