நுவரெலியாவில் புதிய கட்டிடங்களுக்கு கட்டுப்பாடுகள்..!
மே 1 ஆம் திகதி முதல் நுவரெலியா மாவட்டத்தில் 4 மாடிகளுக்கு மேல் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரும் வகையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் முடிவுக்கு அமைவாக புதிய கட்டிடங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சர்கள் சபையில் அங்கீகாரம் வழங்கி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.