யாழ். நெடுந்தீவில் உள்ள வீடொன்றில் இருந்து 4 சடலங்கள் மீட்பு..!
யாழ்-நெடுந்தீவு பகுதியில் கடற்படை முகாமிற்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து நால்வரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் உயிருக்கு போராடிய நிலையில் பெண்ஒருவரும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவமானது இன்று 22/04/2023 இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நான்கு சடலங்களில் இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், அதில் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு பெண் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதன் முறையாக நெடுந்தீவில் இவ்வாறு சந்தேகத்திற்கிடமான வகையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.