நாளைய சூரியகிரகணம் பற்றிய தகவல்கள்..!
நாளை 20/04/2023 இலங்கை நேரப்படி காலை 07.04 மணிக்கு சூரிய கிரகணமானது ஆரம்பித்தது இலங்கை நேரப்படி மதியம் 12.29 மணிக்கு நிறைவடைய இருக்கின்றது. ஆனால் அது இலங்கையில் தென்படாது என கூறப்படுகிறது. அத்துடன் முதலாவது பகுதி சூரிய கிரகணம் காலை 07.04 மணிக்கு ஆரம்பமாகி காலை 08.07 மணிக்கு முழு சூரிய கிரகணம் ஆகின்றது.
இது காலை 09.46 மணிக்கு உச்சமடைந்து, பகல் 11.28 மணிக்கு முழு சூரிய கிரகணம் குறைவடைய உள்ளது. பின்னர் பகுதி சூரிய கிரகணம் முற்றாக பகல் 12.29 மணிக்கு நிறைவடையும் என இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.