முச்சக்கர வண்டி விபத்தில் மூன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு.!
கொடகம சந்தியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் சென்ற மூன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்
நுகேகொடையில் இருந்து மதுலவ உள்ள தமது வீட்டிற்கு முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த குழந்தையின் தாய், தந்தை மற்றும் சகோதரர் காயமடைந்த நிலையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மீகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.