குடி போதையில் வந்த தந்தை மகளின் தலையில் ஆசிட் ஊற்றியுள்ளார்.!
குறித்த சம்பவம் புலத்சிங்கள என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது
குறித்த சந்தேக நபர் அதிக மதுப்பிரியர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர் அடிக்கடி மது அருந்திவந்து மகள் மற்றும் குடும்பத்தினரை துன்புறுத்துவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான 25 வயதுடைய மகள், இரண்டு பிள்ளைகளின் தாய் என்பதுடன், சந்தேகநபரான தந்தை 52 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் புலத்சிங்கள பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருபரென தெரியவந்துள்ளது. இந்த இறப்பர் தொழிற்சாலையில் இருந்து அவர் ஆசிட் போத்தலை திருடியிருக்கலாம் என பொலிஸார் ஆராய்கிறார்கள்.