சாரதியின் நித்திரை கலக்கத்தால் பத்துலு ஓயாவில் பாய்ந்தது பெளசர்!
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளை விநியோகித்து விட்டு கொழும்பு நோக்கி பயணித்த எரிபொருள் பௌசரொன்று புத்தளத்தில் பாலமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி பத்துலு ஓயாவில் கவிழ்ந்துள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக இன்று(24) அதிகாலை 3.30 அளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பிரதேசவாசிகளால் கூறப்படுகிறது
ஓயாவில் கவிழ்ந்த பௌசர் 60 மீட்டர் வரை நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகளால் பௌசர் சாரதி காப்பாற்றப்பட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.