மாங்குளத்தில் கோர விபத்து ஒருவர் பலி!
மாங்குளத்தில் இன்று அதிகாலை 01:45 மணியளவில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பார ஊர்தி மீது குளியாப்பிட்டியில் இருந்து யாழ் நோக்கி பயணித்த முட்டை ஏற்றி வந்த சிறியரக பட்டா வாகனம் பார ஊர்தியின் பின்புறமாக மோதியதில் பட்டாவில் பயணித்த சாரதி, உதவியாளர் இருவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உதவியாளர் சிகிச்சை பயணின்றி உயிரிழந்துள்ளதுடன் சாரதி சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து தொடர்பாக மாங்குளம் பொலிசார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.