நோயாளர் காவு வண்டியுடன் மோதி கோர விபத்து – ஒருவர் உயிரிழப்பு..!

  • மாங்குளம் பகுதியில் நோயாளரை ஏற்றி பயணித்த நோயாளர் காவு வண்டியுடன் உந்துருளி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (23-12-2022) மாங்குளம் ஏ9 வீதி செல்வபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 

 

மல்லாவியில் இருந்து சிறுநீரக நோயாளி ஒருவரை அவசர சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டியுடன் உந்துருளி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

தனது நெற்செய்கை நிலத்தை பார்வையிட்டு வீதியின் மறுபுறத்துக்கு கடக்க முற்பட்டவர் மீது நோயாளியுடன் வேகமாக பயணித்த நோயாளர் காவு வண்டி மோதியுள்ளது.

 

நோயாளர் காவு வண்டியில் பயணித்த நோயாளர் மற்றும் வைத்தியர் ஆகியோர் இன்னுமொரு நோயாளர் காவு வண்டியில் மாற்றப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

 

விபத்தில் படுகாயமடைந்த நபர் 1990 இலக்க அவசர சேவை ஊடாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

இந்த விபத்தில் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியை சேர்ந்த கந்தசாமி சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

விபத்து குறித்து மாங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *