மத்தள சர்வதேச விமான நிலைய நிர்மாணிப்பால் விரயமான கோடிக்கணக்கான பணம்!

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செலவுகள் 200 கோடி ரூபாவைத் தாண்டியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இந்த விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக செலவிடப்பட்ட 3656 கோடி ரூபாய்வுக்கும் அதிகமான தொகையும் உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

 

குறித்த விமான நிலையத்தின் வருடாந்த பயணிகளின் எண்ணிக்கை பத்து இலட்சம் என்றாலும், கடந்த ஐந்து வருடங்களில் தொண்ணூற்றாயிரத்து எழுநூற்று நாற்பத்தேழு பயணிகளே வந்துள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக பெறப்பட்ட 19 கோடி அமெரிக்க டொலர் கடனுக்கான வட்டி உட்பட வருடாந்த கடன் தவணையாக 261 கோடி ரூபாய்விற்கும் அதிகமாக செலுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *