அரச ஊழியர்களுக்கான ஊதியமற்ற விடுமுறை..!
அரசாங்க ஊழியர்களுக்கு ஊதியமற்ற விடுமுறையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்க ஊழியர்களின் பணிமூப்பு மற்றும் ஓய்வூதியம் பாதிக்காத வகையில் கலாநிதிப் பட்டம் பெறுவதற்கு ஊதியமற்ற விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கையில், இந்தத் தீர்மானம் செப்டெம்பர் 12, 2022 முதல் செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 3 வருடங்கள் வரை சம்பளமில்லாத கற்றல் விடுப்பு வழங்க முடியும் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.