புலமைப் பரிசில் பரீட்சை: யாழில் பிரபல பாடசாலையில் நடந்த கொடூரம்..!
யாழ்.நகரில் உள்ள பிரபல பாடசாலையில் தரம் 5ல் கல்வி கற்கும் மாணவர்கள் சிலரை புலமைப் பரிசில் பரீட்சை எழுதவிடாமல் தடுத்த சம்பவம் தொடர்பாக மனித உரிழைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு யாழ்.கல்வி வலயத்தில் உள்ள குறித்த கல்லூரியில்சில மாணவர்கள் பரீட்சை எழுத விடாமல் கல்லூரி நிர்வாகத்தால் தடுக்கப்பட்டனர்.
மாணவர்கள் பரீட்சையில் தோற்றினால் பாடசாலை மட்ட சித்தி வீதத்தில் தாக்கம் ஏற்படும் என கூறியே மாணவர்களை பரீட்சை எழுத விடவில்லை எனவும், ஒரு சில மாணவர்களின் பெற்றோர்களிடம்,
தமது பிள்ளைகளை தாமாக பரீட்சை எழுத அனுமதிக்கவில்லை என கல்லூரி நிர்வாகம் கடிதம் எழுதி வாங்கியதாகவும் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.