பொது இடத்தில் புகை பிடிக்க வேண்டாம் என அறிவுரை வழங்கிய பொது சுகாதார பரிசோதகர் தாக்கம் – இராணுவ சிப்பாய் கைது..!
பொது இடத்தில் புகை பிடிக்க வேண்டாம் என அறிவுரை வழங்கிய பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய யாழ் நாவற்குழி படை முகாமில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் பொல்பித்திகம நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்றைய முன்தினம் (21.12.2022) இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரான இராணுவ வீரர் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் உள்ள முகாமில் பணிபுரிந்து வருவதாக போலீசார் குறிப்பிடுகின்றனர்.
பொது சுகாதார பரிசோதகர் குழு ஒன்று நேற்று முன்தினம் (21) பொல்பதிகம நகரில் உள்ள ஹோட்டல்களை சோதனை செய்த போது ஹோட்டல் ஒன்றில் குறித்த இராணுவ சிப்பாய் புகைப்பிடித்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றது.