5000 பாடசாலை மாணவர்களுக்கு சிறை தண்டனை வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!
போதைப்பொருள் பயன்படுத்தி சிறை தண்டனை விதிக்கப்பட்ட சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களின் எண்ணிக்கை 5000 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை ஊடாக பேச்சாளர் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன எகநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு பாடசாலைக்கு செல்லாத சுமார் 600 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் அடைக்கபட்டுள்ளனர். இது 2021 இல் 190 ஆக குறைந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2015ல் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறை தண்டனை விதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2000 ஆக இருந்ததுடன் 2021ம் ஆண்டு ஆகும் போது 5000 ஆக உயர்ந்தது.
அத்துடன் 2020ஆம் ஆண்டு 22 பட்டதாரிகள் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.