கட்டுநாயக்காவில் அதிக கடத்தல்களை முறியடித்த சுங்க திணைக்கள அதிகாரிகள் திடீர் இடமாற்றம்..!
நாட்டிலேயே மிகப்பெரிய தங்கச் சோதனை உட்பட பல போதைப்பொருள் சோதனைகளை நடத்திய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு திணைக்களத்தின் திறமையான அதிகாரிகள் குழுவை இடமாற்றம் செய்ய திடீர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றஞ்சாட்டப்படாத சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் சுங்க அத்தியட்சகர் மற்றும் நான்கு உதவி சுங்க அத்தியட்சகர்களை இவ்வாறு திடீரென இடமாற்றம் செய்ய தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
400 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத தங்கத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த சுங்க அதிகாரிகள் குழு அண்மையில் பிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய தடை செய்யப்பட்ட தங்கம் 2021 ஆம் ஆண்டு 600 மில்லியன் ரூபா பெறுமதியான 26 கிலோ தங்கம் இந்த அதிகாரிகளால் பிடிபட்டது.
கடந்த சில மாதங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கெய்ன் மற்றும் ஐஸ் உள்ளிட்ட 6 போதைப்பொருள் சோதனைகளை இந்த அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் குழுவொன்றின் திடீர் இடமாற்றம் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என சுங்கத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
ஊழல் குற்றச்சாட்டுக்கள் அல்லது தவறுகள் இல்லாத அதிகாரிகளை இவ்வாறு இடமாற்றம் செய்வது தொடர்பில் அதிகாரிகள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் சுங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒரு அதிகாரியை இடமாற்றம் செய்வதாக இருந்தால், அதை 3 மாதங்களுக்கு முன்பே அதிகாரியிடம் தெரிவித்து விசாரணை செய்வது வழக்கம். ஆனால் முன்னறிவிப்பின்றி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னணியில் ஏதேனும் செல்வாக்கு உள்ளதாக சுங்கத்துறை வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.