பண தேவைக்காக மக்கள் உடல் உறுப்புக்களை விற்கும் நிலை – சஜித் பிரேதாஸ பாகிரங்கம்..!

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் பணம் இல்லாதநிலையில், உடல் உறுப்புகளை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், மின் கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் வீதிக்கு இறங்குவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சூளுரைத்துள்ளார்.

 

ஐக்கிய மக்கள் சக்தியின் ரம்புக்கன தேர்தல் தொகுதிக் கூட்டம் ) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம் பெற்றது.அங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,நாட்டை சீரழித்த, வக்குரோத்தாக்கிய மொட்டுத் தரப்பினர் திருட்டு யானையுடன் இணைந்து நாட்டை மீட்டெடுக்கப்போவதாக கூறுகின்றனர்.

 

 

இதன் ஊடாக அவர்கள் மீண்டும் எழ முயற்சிப்பதாகவும், இது பெரும் நகைச்சுவை எனவும், இதற்கு மக்கள் இடமளிப்பீர்களா எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

 

தமது பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளுக்காக பெற்றோர் தமது முழுமாத சம்பளத்தையும் செலவழிக்க நேரிட்டுள்ளதாகவும், மருத்துவ தேவைகளுக்காக கூடிய தொகை செலவாகுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படும் பட்சத்தில் பேரணியூடாக கொழும்புக்கு வந்து பேராட வேண்டி வரும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

 

 

மக்கள் சிரமங்களை எதிர்நோக்கும் போது அதிபர் நாட்டை விற்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், எமது தாய் நாட்டை மொட்டு விற்பனை நிலையமாக மாற்றியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *