சடலமாக மீட்கப்பட்ட 20 வயதுடைய யுவதி – விசாரணையின் போது தெரிய வந்த திடுகிடும் உண்மைகள்..!

அத்தனகல்ல – தன்விலான பிரதேசத்தில், பின்னகொல்ல பகுதியில் தனிமையில் இருந்த இருபது வயது யுவதியொருவரின் சடலமொன்று 18 ஆம் திகதி இரவு அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்து வெயாங்கொடை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.

 

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர் வத்துபிட்டிய ரணவிருகம பிரதேசத்தில் நிரந்தரமாக வசிப்பவர் எனவும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

சம்பவம் தொடர்பில் நேற்று காவல்துறையினர் நீதிமன்றில் அறிவித்ததையடுத்து, அத்தனகல்ல பதில் நீதவான் பின்னகொல்லவில் உள்ள முட்புதரில் சடலத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

 

குறித்த யுவதி தங்கியிருந்த வயங்கொடை தன்விலான பகுதிலுள்ள வீட்டிற்குச் சென்று நீதவான் மேற்கொண்ட மேலதிக விசாரணையில், யுவதி தனியொரு அறையில் தனிமையில் தங்கியிருப்பதும், காதலனால் மூன்று வேளை உணவும் எடுத்து வரப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

 

இந்நிலையில், மனைவியை விட்டு பிரிந்த திருமணமான இளைஞனுடன் யுவதி காதல் தொடர்பிலிருந்த நிலையில் யுவதியின் காதலன் அந்த உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த இளைஞனை அண்மையில் தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.

 

இதன் காரணமாக யுவதி உயிரிழந்துள்ளதாககாவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

யுவதியின் காதலன் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட நிலையில் பதிலளிக்காமல் யுவதி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட போது பின்னகொல்ல பகுதியில் உந்துருளி எரிபொருள் தீர்ந்து போனமையினால் சம்பவம் குறித்து அவரது தாயாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தாயின் அறிவுறுத்தலின் படி சடலத்தை அந்த இடத்தில் விட்டுவிட்டு காதலன் வயங்கொடை காவல்துறையினருக்கு அறிவித்துள்ளதாகவும் நீதவான் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இதன்போது மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட நீதவான் விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை வட்டுப்பிட்டிவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பதில் நீதவான் வயங்கொடை காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

பிரேத பரிசோதனையை மேற்கொண்டு மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு வட்டுபிட்டியல ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *