பிரித்தனியாவை அதிரவைத்த இந்திய இளம் குடும்பத்தின் மூன்று கொலை – சிக்கிக்கொண்ட கணவன்..!
பிரித்தானியாவில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்டமை பாரியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த கொலைகளின் பின்னணயில் கணவர் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் Ketteringல் கடந்த வியாழன் அன்று இந்தியாவின் கேரளாவை சேர்ந்த பெண் அஞ்சு அசோக் (40) மற்றும் அவரின் குழந்தைகளான ஜீவா சாஜு (6), ஜான்வி சாஜு (4) ஆகியோர் கொலை செய்யப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் இவர்களில் கொலை செய்யப்பட்ட அஞ்சுவின் இறப்புக்கான காரணம் வெளியாகியுள்ளது. அதன்படி அஞ்சு சால்வை அல்லது கயிற்றை கொண்டு கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் அஞ்சுவின் கணவரான செவ்வேள் சாஜு (52) தற்போது காவல்துறை விசாரணை மற்றும் காவலில் உள்ளார். சாஜு 72 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டு அவர் மீது கொலை வழக்கு பதியப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் ஜீவா மற்றும் ஜான்வி உடல்களுக்கு பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளது.
வேலை சரியாக அமையாத விரக்தியில் செவ்வேள் சாஜு இருந்து வந்ததுடன் அடிக்கடி குடும்ப வன்முறையில் ஈடுபடுபவர் எனவும் கூறப்படுகின்றது. இந்தநிலையிலேயே தாயார் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.