விவசாயிகளின் கணக்கில் வைப்பு செய்யப்படவுள்ள பணதொகை..!
விவசாயக் குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியே மக்களுக்கு இவ்வாறு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
அடுத்த வாரத்தில் இருந்து இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 08 பில்லியன் ரூபாவினை 1.2 மில்லியன் விவசாயக் குடும்பங்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், ஒரு ஹெக்டேருக்கு குறைவாக விவசாயம் செய்யும் குடும்பத்திற்கு 10,000 ரூபாவும், ஒரு ஹெக்டேருக்கு மேல் விவசாயம் செய்யும் குடும்பத்திற்கு 20,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் முதல் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் குறித்த பணத்தொகையை வைப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.