யாழ் கடற்பரப்பில் தத்தளித்த கப்பல்! மியன்மார் நாட்டைச் சேர்ந்த 130 பேர் மீட்பு.
யாழ்ப்பாணம் – மருதங்கேணி, கட்டைக்காடு கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்த சுமார் 130 பேரும் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
இவர்கள் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டக்காடு கடற்பகுதியில் 100 ற்கும் மேற்பட்ட மக்களுடன் படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது.
கட்டைக்காட்டு கடற்பரப்பிலிந்து 5 கடல் மைல் தொலைவில் குறித்த படகு கரை ஒதுங்கி வந்த நிலையில் பிரதேச கடற்தொழிலாளர்களினால் இது தொடர்பில் ஸ்ரீலங்கா கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த படகிலிருந்தவர்களை மீட்க்கும் பணிகளுக்காக 4 கடற்படைக் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த படகில் அதிகளவான சிறுவர்கள் காணப்படுவதாகவும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான விபரங்கள் கண்டறியப்படவில்லையெனவும் சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
அத்துடன் படகிலுள்ள மக்களை காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.