இந்தியாவுக்கு, பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்துள்ளது. மோடியால் உச்சக்கட்ட பதற்றம்!

பிரதமர் நரேந்திர மோடியை குஜராத் கலவரத்தோடு தொடர்புபடுத்தி கடுமையாக பாகிஸ்தான் வெளி உறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ அவதூறான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

 

பிலாவலின் பேச்சு இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. நாட்டின் பல்வேறு மாநில தலைநகரங்களில் பிலாவல் பூட்டோவை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

 

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்தநிலையில் இந்தியாவுக்கு, பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்துள்ளது.

 

பாகிஸ்தான் ஆளும் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பெண் தலைவரும், அமைச்சருமான ஷாஜியா மாரி ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

 

பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளது என்பதை இந்தியா மறந்துவிடக்கூடாது. எங்களது அணுசக்தி நிலை அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல.

 

தேவை ஏற்பட்டால் நாங்கள் பின்வாங்க மாட்டோம். எப்படி பதில் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு தெரியும். எங்களை அறைந்தால் நாடு பின்வாங்காது. பாகிஸ்தானும் சமமான தீவிரத்துடன் பதிலடி கொடுக்கும். இந்தியாவின் பிரதமர் நாட்டில் வெறுப்பை மட்டுமே பரப்புகிறார்.

 

மோடி அரசாங்கம் சண்டையிட்டால் பிறகு அவருக்கு தக்க பதிலடி கிடைக்கும். பாகிஸ்தான் மீது மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுகளை கூறினால் பாகிஸ்தான் அமைதியாக கேட்டுக் கொண்டு இருக்காது” என தெரிவித்துள்ளார்.

 

அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஷாஜியா மாரி தனது டுவிட்டர் பக்கத்தில், பாகிஸ்தான் பொறுப்புள்ள அணுசக்தி நாடு.

 

இந்திய ஊடகங்களில் உள்ள சில கூறுகள் பீதியை உருவாக்க முயலுகின்றன. தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவை விட பாகிஸ்தான் அதிகம் தியாகம் செய்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *