காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்!
காலிமுகத்திடல் போராட்டக்கள செயற்பாட்டாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் அவரது உடல் நிலை குறித்து வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர் டிலான் சேனநாயக்கவின் மீதே குறித்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நுகேகொடை பகுதியில் வைத்து கத்திக் குத்திற்கு இலக்கான அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது உடல் நிலை தேறிவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாகொட வீதியில் உள்ள டிலானின் வீட்டில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதலால் சேனாநாயகவின் கால் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.