“சர்வதேச பயங்கரவாத அமைப்பிடம் இருந்து போராட்டத் தலைவர்களுக்கு பெருமளவு பணம்” – சட்டமா அதிபர்!
காலி முகத்திடல் போராட்டத்தை முன்னெடுத்த செயற்பாட்டாளர்கள் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து பெருமளவு பணம் பெற்றுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பஸ்களை வழங்குமாறு கோரியதாகவும், அதற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பு பணம் வழங்குவதாகவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன பொலிஸாரிடம் விடுத்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தின் போது, செயற்பாட்டாளர்கள் மத்தியில் பாரியளவில் பணம் புழக்கத்தில் விடப்பட்டதாக சட்டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.