பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் பிரவேசிப்பதை தடுப்பதற்காக ஸ்ரீலங்கா காவல் துறையினரால் தேடுதல் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது!
பாடசாலைக்குள் போதை பொருள் பிரவேசிப்பதை தடுப்பதற்காக ஸ்ரீலங்கா காவல் துறையினரால் தேடுதல் வேலைதிட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் கொட்டுகச்சிய நவோதயா வித்தியாலயத்தில் நேற்று (13.12.2022) முதல்கட்கமாக இந்த காவல்துறை தேடுதல் வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலை 6 மணி முதல் பள்ளி தொடங்கும் வரை பள்ளிக்கு வரும் மாணவர்களின் பைகள், உடைகள் என்பன சோதனை செய்யப்பட்டன.
அண்மைக்காலமாக பாடசாலைகளுக்கு பல்வேறு வகையான போதைப்பொருட்கள் உள்வருவதால் பாடசாலை நடவடிக்கைகளில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதை கருத்திற்கொண்டு புத்தளம் கல்வி வலய பாடசாலைகளுக்கு உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்றிய அவசர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக 30 ஆண் மற்றும் பெண் காவல்துறையினர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஆய்வு நேரத்தில், பள்ளியைச் சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் ஏனைய காவல்துறை அதிகாரிகளால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
புத்தளம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அஜீத் ஹெசிறியின் ஆலோசனையின் பேரில் பிரதேச போக்குவரத்து, சமூக மற்றும் சுற்றாடல் உதவி காவல்துறை அத்தியட்சகர் எப்.பி.சி.ரொட்ரிகோ அவர்களின் வழிகாட்டலின் கீழ், பிரதேச குற்றப்பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி சந்திரசிறி லால் உள்ளிட்ட அதிகாரிகள் குறித்த தேடுதலில் கலந்துகொண்டனர்.