இறக்குமதி தொடர்பில் கொண்டுவரப்பட்ட புதிய ஏற்பாடு!
சிறிலங்கா அரசினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.
பொருள் இறக்குமதி தொடர்பாகவே இந்த வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகள் தொடர்பில் அரசினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், பாஸ்மதி அரிசி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளைகளின் இறக்குமதியை தடை செய்து நிதி அமைச்சு இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.