பிரித்தானிய மக்களுக்கு பிரித்தானிய அரசு விடுக்கும் அறிவிப்பு.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு பிரித்தானிய அரசாங்கம் இலங்கை செல்வது தொடர்பாக அறிவுறுத்தல்களை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, மருந்து, உணவு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், தினசரி மின்வெட்டு இருப்பதாகவும் பிரித்தானிய அரசாங்கம் மக்களுக்கு கூறியுள்ளது.
எனவே, இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருக்கும் பிரித்தானிய மக்கள் பொருத்தமான பயணக் காப்புறுதியைப் பெற்று, அது போதிய பாதுகாப்பை வழங்குகிறதா என்பதைச் சோதிப்பது முக்கியம் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு எதிராக இலங்கையில் போராட்டங்கள் இடம்பெறுவதால் அவற்றை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர் பிரயோகம் பயன்படுத்துவதால், அவ்வாறான இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும், இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரித்தானிய மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.