பாடசாலை மாணவர்களுக்காக ‘உளவிழிப்புணர்வு’ திட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி!

பாடசாலை மாணவர்களுக்கான ‘உளவிழிப்புணர்வு’ திட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அதற்கமைய ‘Mindfulness school’ இன் ஸ்தாபகர் வணக்கத்திற்குரிய உடஈரியாகம தம்மஜீவ தேரர் அவர்களின் உளவிழிப்புணர்வு மன்றம் இணைந்து உளவிழிப்புணர்வை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டத்தைப் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்ச்சித் திட்டமானது, சிக்கலாகவும் வேகமாகவும் இயங்கி வருகின்ற சமூகத்திற்கு முகங்கொடுத்து மாணவர்கள் தமது ஆளுமையை விருத்தி செய்து கொள்வதற்கு தேவையான அனுபவத்தை பாடசாலையிலேயே வழங்கி அவர்களின் தவறான நடத்தைகளைத் தடுப்பதற்கு ஏதுவாக அமையும் இக்கல்வி நிகழ்ச்சித்திட்டத்தை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய 2023 ஜனவரி மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 24 வரை ஒவ்வொரு புதன்கிழமையும் இந்நிகழ்ச்சித்திட்டம் நடத்தப்படவுள்ளது.

பின்னர் குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 7.30- 7.40 வரைக்கும் நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *