34 ஆயிரம் பட்டதாரிகளுக்கு கிடைக்கும் வாய்ப்பு!
இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சுமார் 34 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஓய்வு பெற உள்ள சிரிஷ்ட அரச அதிகாரிகளின் கடமைகளை அறிந்து கொள்வதற்காக ஒரு வருட காலம் பயிற்சிவிக்கப்படும் என பொது நிர்வாக உள்ளக அலுவல்கள் மற்றும் உள்ளூர் ஆட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் அரச ஊழியர்கள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவை தொடர்ந்து இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் சுமார் 25 ஆயிரம் அரச ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளனர்.
பெருந்தொகையான அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றாலும் போதிய அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் இருக்கின்றனர். எனவே அரசு சேவையில் எந்த வீழ்ச்சியும் ஏற்படாது. ஏறக்குறைய 250 அரச வைத்தியர்களும் 1200 செவிலியர்கள் 60 வயதை எட்டியதால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஓய்வு பெற உள்ளனர் என்றார்.